உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-02-25 09:34 GMT
புதுடெல்லி,

உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷியா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று  அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில், உக்ரைன் விவகாரம்  தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டத்தில் இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்