ம.பி. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் பலி; ராஜஸ்தானிலும் சோகம்

இரு வேறு சம்பவங்களில் ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது சிறுவர்கள் விழுந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் சிறுவன் உயிரிழந்து உள்ளான்.

Update: 2022-02-25 06:29 GMT


உமரியா,



நாட்டில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்து உள்ளது.  தேவைக்காக கிணறுகளை பல அடி ஆழத்திற்கு தோண்டிவிட்டு, பின்னர் அதனை அப்படியே விட்டு விடுவது பேராபத்து ஏற்படுத்தி வருகிறது.

மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் பத்சத் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் கவுரவ் துபே (வயது 4) என்ற சிறுவன் தவறி விழுந்துள்ளான்.  இதுபற்றி தகவல் அறிந்து தேசிய பேரிடர் முட்பு படை, மாநில பேரிடர் முட்பு படை ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டன.  மாவட்ட கலெக்டர் சஞ்ஜீவ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் மீட்பு பணிகள் நடந்து வந்தன.

தொடர்ந்து 16 மணிநேர போராட்டத்திற்கு பின்பு அதிகாலை 4 மணியளவில் சிறுவனை வெளியே கொண்டு வந்தனர்.  உடனடியாக கத்னி மாவட்டத்தில் பார்ஹி சுகாதார மையத்திற்கு சிறுவனை கொண்டு சென்றனர்.  எனினும், சிறுவன் கவுரவ் உயிரிழந்து விட்டான் என டாக்டர் ராஜாமணி கூறியுள்ளார்.  மீட்பு குழு சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

இதேபோன்று ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் 4 வயது சிறுவன் 55 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.  அவனை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்