மத்திய பிரதேச மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரிலிருந்து 125 கி.மீ தெற்கு-தென்மேற்கு திசையில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
An earthquake of magnitude 3.5 occurred 125km South-South-West of Indore, Madhya Pradesh, at around 4:53am today, as per National Center for Seismology. pic.twitter.com/H5lHTpzwIH
— ANI (@ANI) February 24, 2022
இன்று காலை 4.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இதனால் பெரிய அளவிலான பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.