இந்தியாவிற்கு வந்த மேலும் 3 ரபேல் விமானங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் விமானம் இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி ஏற்கனவே 32 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்தடைந்ததாக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இதுவரை 35 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு விமானம் விரைவில் இந்தியா வந்தடையும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.