உத்தரபிரதேச 4-ம் கட்ட தேர்தல் : மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாக்களித்தார்

இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-23 05:28 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக  நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, உ.பி.யில்  9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது .வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ,லக்னோவில் உள்ள வாக்குச்சவடியில்  வாக்கு  அளித்தார்.

மேலும் செய்திகள்