உத்தரபிரதேசத்தின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல் இது - அகிலேஷ் பேச்சு

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் இது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-22 12:08 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 4-ம் கட்ட தேர்தல் நாளை (பிப்.23) நடைபெற உள்ளது. 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பிஹிர்பூர் மாவட்டம் கர்ஜனா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அகிலேஷ், இந்த தேர்தல் சாதாரண சட்டசபை தேர்தல் அல்ல. இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல். உத்தரபிரதேசத்தின் தலை எழுத்தை மாற்றும் தேர்தல் இது’ என்றார்.

மேலும் செய்திகள்