கர்நாடகாவில் மேலும் 1,137- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,137- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-19 16:30 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் இன்று  79 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக பெங்களூரு நகரில் 646 பேர், மைசூருவில் 64 பேர், பெலகாவியில் 42 பேர், குடகு, மண்டியாவில் தலா 28 பேர் உள்பட 1,137 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 6 கோடியே 39 லட்சத்து 59 ஆயிரத்து 176 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 39 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூரு நகரில் 8 பேர், தட்சிண கன்னடா, தார்வாரில் தலா 2 பேர், பாகல்கோட்டை, சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, ஹாசன், கோலார், மைசூரு, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவர் என மேலும் 20 பேர் இறந்தனர். இதுவரை 39 ஆயிரத்து 777 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று 3,870 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 38 லட்சத்து 82 ஆயிரத்து 340 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 13 ஆயிரத்து 431 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 1.43 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.75 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்