மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைவு

தலைநகர் மும்பையில் புதிதாக 201 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

Update: 2022-02-19 15:56 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று மாநிலத்தில் புதிதாக 1,635 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 56 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 76 லட்சத்து 91 ஆயிரத்து 64 பேர் குணமாகி உள்ளனர். 

தற்போது 18 ஆயிரத்து 368 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 29 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். வைரஸ் நோய்க்கு இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 576 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் புதிதாக யாருக்கு ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை. இதுவரை நோய் பாதித்த 4 ஆயிரத்து 456 பேரில் 3 ஆயிரத்து 768 பேர் குணமாகி உள்ளனர்.

தலைநகர் மும்பையில் புதிதாக 201 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருவர் பலியானார். நகரில் இதுவரை 10 லட்சத்து 55 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 687 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 98 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்