ஒரே நாளில் புலி தாக்கி பெண்ணும் சிறுத்தை தாக்கி சிறுவனும் பலி..!
மராட்டிய மாநிலம் சந்திரபூரில் புலி தாக்கி பெண்ணும் சிறுத்தை தாக்கி சிறுவனும் பலியாகி உள்ளனர்.
சந்திரபூர்,
மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் 24 மணிநேரத்திற்குள் புலி தாக்கியதில் 55 வயது பெண்ணும் சிறுத்தை தாக்கியதில் 16 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு ராஜூ பத்கே என்ற 16 வயது சிறுவன் மைதானம் ஒன்றில் இருந்தபோது சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது. மறுநாள் காலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய சந்திரபூர் வன அலுவலர் ராகுல், சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சிறுத்தையை பிடிக்க கேமராக்கள் மாட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கோசம்பி என்ற கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண்ணை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. அவரது குடும்பத்திற்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.