விஜய் மல்லையா, நிரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: வருண்காந்தி
விஜய் மல்லையா, நிரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வருண்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தின்போது, அவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி கருத்து தெரிவித்தார். அதனால், பா.ஜனதா தேசிய செயற்குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், மோடி அரசை விமர்சித்து நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில் வருண்காந்தி கூறியிருப்பதாவது:-
விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடியும், நிரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடியும், ரிஷி அகர்வால் ரூ.23 ஆயிரம் கோடியும் மோசடி செய்துள்ளனர். நாட்டில் நாள் ஒன்றுக்கு 14 பேர் தற்கொலை கொள்கின்றனர். இத்தகைய தேசத்தில், இந்த பணக்கார மிருகங்களின் வாழ்க்கை உச்சத்தில் இருக்கிறது. இந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக அரசு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.