பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனுக்கு சூடு வைத்த தாய் கைது

பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனுக்கு சூடு வைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-02-18 08:44 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவனை தாய் கண்டித்து உள்ளார். ஆனால் என்ன செல்லியும் அந்த சிறுவன் கேட்பதாக தெரியவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய், சிறுவனின் காலில் சூடு வைத்து உள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் சிறுவன் கதரி அழுது உள்ளான். இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் சிறுவனின் தாயை கண்டித்து உள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பாலக்காடு போலீசார் சிறுவனின் தாயை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்