ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்...!

ராஜஸ்தானில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-02-18 04:19 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்