மனிதர்களா? மிருகங்களா? கன்றுக்குட்டி பலாத்காரம் 4 பேர் கைது!
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பெண் கன்றுக்குட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.
அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு நபர்கள் சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர், இந்த சம்பவத்தையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அந்த கன்றுகுட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20-22 வயதுக்குட்பட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வார் மாவட்டம் திஜாராவில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.