பிப்ரவரி மாதம் இந்திய இசைக் கலைஞர்களுக்கு போதாத காலம் - வருத்தப்படும் ரசிகர்கள்!
இந்த ஒரே மாதத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று காலமானார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985-ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பப்பி லஹிரி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.
இதற்கிடையே, துரதிர்ஷ்டவசமாக பிரபல வங்காள பாடகியான சந்தியா முகர்ஜி நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இப்படி இந்த ஒரே மாதத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூகவலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு ரசிகர் பதிவிட்டுள்ள பதிவில், ‘இந்திய இசைத்துறையில் என்ன கொடூரம் நடக்கிறது.. சாதனையாளர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்’ என தெரிவித்துள்ளார்.
What the hell is happening in Indian Music !! 😓😭
— AD (@adsaying) February 16, 2022
R I.P. Legends 🙏#LataMangeshkar#SandhyaMukherjee#BappiLahiri#RIP#legendspic.twitter.com/6DGtUpuo72
இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ள பதிவில், ‘மரணத்திற்கு அப்பாற்பட்ட உலகில் ஒரு கச்சேரிக்காக லதா திதியுடன் சந்தியா முகோபாத்யாய் மற்றும் பப்பி லஹிரி ஆகியோர் இணைந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
Lata Didi is joined by Sandhya Mukhopadhyay and Bappi Lahiri too for a concert in a world beyond death. Golden era is withering away with these legends gone. (2/2)#LataMangeshkar#SandhyaMukherjee#BappiLaharipic.twitter.com/r9TK9pYTXI
— Himel Ghosh (@HimelGhosh) February 16, 2022
இவ்வாறு பலரும் தங்களது வருத்தத்தை பதிவிட்டுள்ளனர்.