தாவூத் இப்ராகிமுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.
மும்பை,
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். தாவூத் இப்ராகிம் ஆதிக்கம் அதிகம் உள்ள நாக்பாடா பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல அமலாக்கத்துறையினர் தாதா சோட்டா சகீலின் மைத்துனர் சலீம் புருட்டையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் 2 பேரிடம் இருந்து மந்திரி நவாப் மாலிக் குர்லா பகுதியில் 2.8 ஏக்கர் சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கியதாக சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி இருந்தார். எனவே அந்த விவகாரம் குறித்தும் அமலாக்கத்துறை இந்த வழக்கின் கீழ் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.