அரசியல், பொது சேவைகளை விட்டு நான் விலகவில்லை; காங்கிரசில் இருந்து விலகிய அஷ்வனி குமார் பேட்டி
முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்
அமிர்தசரஸ்,
பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 69 வயதான அஸ்வனி குமார் 2012 அக்டோபர் 28 முதல் 2013 மே 11 வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தார்.
2013- இல் ஜப்பானுக்கான சிறப்புத் தூதராக அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கால் நியமிக்கப்பட்டார். இவரின் விலகல் தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், அஸ்வனி குமாரின் ராஜினாமா வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை பாதிக்காது”என்றார்
இந்த நிலையில், அரசியல், பொது சேவைகளை விட்டு நான் விலகவில்லை, தேசத்திற்கான எனது கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவேன்” என அஷ்வனிகுமார் தெரிவித்துள்ளார். இதனால், அஷ்வனி குமார் வேறு கட்சியில் சேரக்கூடும் என்ற பரபரப்பாக பேசப்படுகிறது.