இந்திய ராணுவத்தின் முதல் அனைத்து பெண் அதிகாரிகளின் கடல் சாகச பாய்மரப் படகு பயணம் - வீடியோ
இந்திய ராணுவத்தின் முதல் அனைத்து பெண் அதிகாரிகளின் கடல் சாகச பாய்மரப் படகு பயணத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை துறைமுகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
அனைத்து ஆயுத பெண் அதிகாரிகளின் கடல் பாய்மரப் பயணம் சென்னை-விசாகபட்டினம் -சென்னை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக அதிக அளவில் பெண் அதிகாரிகள் பாய்மரப படகு பயணம் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தை தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின்கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முதன்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்தியதற்காக பாய்மரப் படகு சங்கம், தெற்குக் கமாண்ட் பாய்மரப் படகு சங்கம் மற்றும் ராணுவ சாகசப் பிரிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.
இந்த பயணம் ஒரு சாகச பாய்மரப் பயணம் செய்வதற்கு உத்வேகத்தை அளிப்பது மட்டுமல்லாமல், இளம் பெண்களை ஆயுதப்படையில் சேர ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “இந்திய ராணுவத்தில் பெண்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை நோக்கிய தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் ஊக்கத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது. பல ஆண்டுகளாக இந்திய இராணுவம் பெண்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளது, மேலும் அவர்கள் சிறப்பாக பங்காற்றியதால், ஆயுதப் படைகளில் அவர்களின் மேம்பட்ட பங்கையும் மரியாதையையும் என்னால் பார்க்க முடிகிறது." என்று கூறினார்.
Inaugurated the flagging off ceremony of the first ever All Arms All Women Officers "Offshore Sailing Expedition" at #Chennai Port.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 15, 2022
This is the first of its kind expedition in the arena of Sailing (Chennai-Vizag-Chennai) & marks an important stride in women empowerment.
1/2. pic.twitter.com/1lZtKg3kvY
லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ்ஏ நாராயணன் பெண் அதிகாரிகளை வாழ்த்தி, பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், மேலும் இந்த நிகழ்வு பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மற்றொரு படியாகும் என்றும் இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் பங்கை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் என கூறினார்.
கார்ப்ஸ் ஆப் ஈஎம்இயைச் சேர்ந்த மேஜர் முக்தா எஸ்.கவுதம், மேஜர்கள் பிரியா செம்வால், பிரியா தாஸ், ரஷ்மில் சங்வான், அர்பிதா த்விவேதி மற்றும் சஞ்சனா மிட்டல் மற்றும் கேப்டன்கள் ஜோதி சிங், மாளவிகா ராவத், சுபம் சோலங்கி மற்றும் சோனல் கோயல் ஆகியோர் அடங்கிய அணியுடன் இந்த பயணத்தை வழிநடத்துகிறார்.
பயணத்திற்கு முன், அதிகாரிகள் கடலில் பாய்மர பயிற்சி பெற்றனர் மற்றும் இஎம்இ பாய்மரப் படகு சங்கம் மற்றும் எச்பிடிசி மார்வ் பயிற்சியின் கீழ் கடுமையான பயிற்சி பெற்றனர்.
இஎம்இ பாய்மரப் படகு சங்கம் கடந்த இருபது ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான கடல் பாய்மரப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதில் 2009 இல் ஜ24 படகுகளில் மும்பை-கொச்சி பயணம், 2017ல் மும்பை-கோவா-மும்பை இடையே சீபேர்ட் வகுப்பு படகுகள் பயணம், 2018 ஆம் ஆண்டில் இந்திய தீபகற்பத்தை சுற்றி உள்ள இந்திய ராணுவம் கடலோர பாய்மரப் பயணம் போன்ற பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.