12 முதல் 18 வயதினருக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அனுமதிக்கு கோரிக்கை

12 முதல் 18 வயதினருக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அனுமதிக்கும் படிக் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-02-14 00:13 GMT
புதுடெல்லி,

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி. புரத துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக ‘கோர்பேவேக்ஸ்’ உள்ளது. பயாலாஜிக்கல் ஈ என்ற நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இத்தடுப்பூசியை 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு 2-ம் கட்ட மருத்துவமனை பரிசோதனை நடத்துவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. ‘அந்தப் பரிசோதனையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்லது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் நடப்பு கொரோனா சூழ்நிலை, பரவலான தடுப்பூசி பயன்பாட்டை கருத்தில்கொண்டு, 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று பயாலாஜிக்கல் ஈ நிறுவனத்தின் தலைமை தரக் கட்டுப்பாடு அதிகாரி சீனிவாஸ் கொசராஜு கோரியுள்ளார்.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு அவர் அனுப்பியுள்ள விண்ணப்பத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பில், தற்போது செலுத்தப்பட்டுவரும் கோவிஷீல்டை விட சிறப்பான செயல்திறன் கொண்டதா என கோர்பேவேக்ஸ் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்