‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-02-13 21:25 GMT
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி ஒலிபரப்பாகிறது. இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த மாதத்தின் ‘மனதின் குரல்' நிகழ்ச்சி பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும். எப்போதும் போல், அதற்கான உங்கள் ஆலோசனைகளைப் பெற ஆவலாக உள்ளேன். அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிரவும். 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைத்தும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்