தவறுதலாக எல்லை தாண்டியவரை பாக். ரேஞ்சர்களிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்
சர்வதேச எல்லையை கவனக்குறைவாகத் தாண்டிய பாகிஸ்தானியர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் பி.எஸ்.எஃப் அதிகாரிகள் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
அகமதாபாத்,
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் குமோனோ என்பவர் தனது வீட்டில் சண்டை போட்டு விட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 9 தேதி இரவு கவனக்குறைவாக சர்வதேச எல்லையைக் கடந்து குடா-சபரியா இணைப்பை அடைந்தார்.
இந்திய ராணுவத்தின் 56வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த படை வீரர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தவறுதலாக எல்லை தாண்டியது தெரியவந்தது. மேலும் சோர்வாக காணப்பட்ட அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர். பின்னர் இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதியும் இதே போன்று பாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஒப்படைக்கப்பட்டதாக பி.எஸ்.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்