டெல்லியில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 977- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-11 14:50 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 977- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 122- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73- சதவிகிதமாக மாறியுள்ளது. 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 49- ஆயிரத்து 596- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  26 ஆயிரத்து 047- ஆக  உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய ஒரே நாளில் 56,444- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

டெல்லியில் நேற்று 1,104- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  3-வது அலை பரவத்தொடங்கிய பிறகு டெல்லியில் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழே செல்வது இதுவே முதல் முறையாகும்.  கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 28,867- ஆக பதிவானது. 

மேலும் செய்திகள்