கட்டுப்பாடுகளை தளர்த்தியது சிக்கிம் அரசு...!
அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட அனுமதி அளித்து சிக்கிம் அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்டாக்,
சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி,
* அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட அனுமதி.
* சமூக, அரசியல், மத மற்றும் விளையாட்டு தொடர்பான கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.
*சந்தைகள், கடைகள்,வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
* மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படும்.
*மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், நிறுவனங்கள் உட்பட அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் 100 சதவீத வருகையுடன் கடுமையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.