பொருளாதார ஸ்திரதன்மை, தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்; மத்திய நிதி மந்திரி
பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என மத்திய நிதி மந்திரி நாடாளுமன்றத்தில் இன்று பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு பதிலளித்து மேலவையில் இன்று பேசி வருகிறார். இதில் அவர் பேசும்போது, பொருளாதார ஸ்திரதன்மையை கொண்டு வர கூடிய மற்றும் வரி விதிப்பில் முன்கூட்டியே கணிக்க கூடிய மற்றும் இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை கொண்ட பட்ஜெட்டை நாம் தாக்கல் செய்துள்ளோம்.
இந்திய வேளாண்மையை மேம்படுத்த மற்றும் நவீனப்படுத்த ஒரு திறன்வாய்ந்த உபகரணம் என்ற வகையில் டிரோன்கள் கொண்டு வரப்படும். இந்த டிரோன்கள், பல்வேறு வகையில் பயனளிக்க கூடியவை.
இவற்றால், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை திறம்பட பயன்படுத்த முடியும். ஒரு நல்ல தொழில்நுட்பம் சார்ந்த வகையில், பயிரின் அடர்த்தியையும் டிரோன்களை கொண்டு பகுப்பாய்வு செய்ய முடியும் என பேசியுள்ளார்.