இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 171 கோடியை தாண்டியது..!

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 171 கோடியை தாண்டியுள்ளது.

Update: 2022-02-10 15:30 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இலவச முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி மொத்தம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் இந்தியாவுக்கு பாராட்டு கிடைத்தது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டு 150 கோடி என்ற என்ணிக்கையை தாண்டியது.

இந்த நிலையில், மத்திய சுகாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 171 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 1,71,73,91,556 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் இன்று ஒரே நாளில் 43,78,909 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 1,64,61,231 பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை செலுத்தப்பட்ட முதல் தவணை தடுப்பூசிகள் : 95,41,42,669

இதுவரை செலுத்தப்பட்ட இரண்டாவது தவணை தடுப்பூசிகள்: 74,67,87,656

மொத்த எண்ணிக்கை - 1,71,73,91,556

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்