கேரளாவில் இன்று 23,253 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் தற்போது 2.58 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றைய தினம் அங்கு 41,668 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 23,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகியுள்ளது.
கேரளாவில் இன்று 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 198 உயிரிழப்புகள் தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்படி இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 60,793 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 47,882 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,26,884 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 2,58,188 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.