18 வருடம் குழந்தை இல்லாத பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்...!

கோட்டயம் அருகே திருமணமாகி 18 வருடங்கள் குழந்தையில்லாத பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

Update: 2022-02-09 10:36 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அதிரம்புழ பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. இந்த தம்பதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் 18 வருடங்களுக்கு மேலாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிரசன்னா குமாரி கர்ப்பமானார். குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை வழங்கியது. அன்றில் இருந்து மருத்துவரின் ஆலோசனை படி பாதுகாப்புடன் கண்ணும் கருத்துமாக குழந்தையை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பிரசன்ன குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் சுரேஷ் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தார். 

பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 4 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். 

இது தொடர்பாக  மருத்துவர் ஒருவர் கூறுகையில்,

எங்கள் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல்முறை.  ஆகையால் அந்தப் பெண்ணின் பிரசவ செலவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது நான்கு குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்