பா.ஜ.க.வின் குறிக்கோள் புதிய பஞ்சாப்; பிரதமர் மோடி பேச்சு

பா.ஜ.க.வின் குறிக்கோள் புதிய பஞ்சாப் உருவாக்குவது என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2022-02-09 00:30 GMT
புதுடெல்லி,


பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி காணொலி மூலம் பிரசாரம் செய்து வருகிறார்.  அவர் பேசும்போது, புதிய பஞ்சாப்பை உருவாக்குவதே பா.ஜ.க.வின் குறிக்கோள். எங்களிடம் தொலைநோக்கு பார்வையும் பணியின் சாதனையும் உள்ளது. பஞ்சாபில் எல்லை பகுதி மேம்பாட்டு ஆணையம் உருவாக்குவோம். கர்தார்பூர் சாஹிப்பை காங்கிரசால் இந்தியாவில் வைத்திருக்க முடியவில்லை.

ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக சிலர் பஞ்சாபை பயங்கரவாத தீயில் எரிய விடுகிறார்கள். இந்தியாவை முன்னோக்கி வைத்திருப்பது பஞ்சாபின் அடையாளம். சீக்கியர்களுக்கு துணை நிற்கும் அரசாக பா.ஜ.க. எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்