மேற்கு வங்காள கவர்னரை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு
மேற்கு வங்காள கவர்னரை நீக்கக்கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கவர்னராக ஜக்தீப் தன்கர் இருந்து வருகிறார். அவருக்கும், அம்மாநில முதல்-மந்திரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜிக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், கவர்னரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராமபிரசாத் சர்க்கார் என்பவர், கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 11ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.