15-18 வயது பிரிவில் தடுப்பூசி செலுத்தியோர் 67 சதவீதம்

15-18 வயது பிரிவில் இதுவரை தடுப்பூசி செலுத்தியோர் 67 சதவீதம் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.

Update: 2022-02-08 22:34 GMT

புதுடெல்லி,



நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பேசும்போது, இந்தியாவில், தகுதியுள்ளோரில் 97.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  77 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட, 90 சதவீதத்திற்கு மேல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இப்பிரிவில் இதுவரை, 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 5 கோடி பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.  பள்ளிகள் திறக்கப்படுவதால், 15 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து நிபுணர்கள் குழுவிடம் ஆலோசனை பெறப்பட்டு முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்