மராட்டியத்தில் ரூ.100 கொடுக்கல் வாங்கலில் நண்பரை கொலை செய்த நபர்

மராட்டியத்தில் ரூ.100 கொடுக்கல் வாங்கலில் நண்பரை கொலை செய்து தற்கொலை என நாடகம் ஆடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-08 20:17 GMT


புனே,



மராட்டியத்தின் மும்பையில் தஹிசார் பகுதியில் மெக்கானிக்காக இருப்பவர் பரமேஷ்வர் கோக்கத்தே (வயது 28).  இவரது நண்பர் ராஜூ பாட்டீல் (வயது 40).  ராஜூவின் உறவினர் கோக்கத்தேவிடம் இருந்து ரூ.100 பணம் வாங்கி கொண்டு, அதனை திருப்பி தர மறுத்து உள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ராஜூவை அடித்து தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டார்.  இதன்பின் ராஜூவின் உடலை தீ வைத்து எரித்து விட்டு தற்கொலை போன்று காட்ட முயற்சித்து உள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்து, கோக்கத்தேவை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்