100 ரூபாய் தகராறில் மெக்கானிக்கை கொலை செய்த வாலிபர் கைது

ரூ.100 தகராறில் மெக்கானிக்கை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-08 11:58 GMT
மும்பை,

மும்பை தகிசர் கனபத் பாட்டீல் நகரை சேர்ந்தவர் ராஜூ பாட்டீல் (வயது40). மெக்கானிக். இவர் தகிசர் கிழக்குப்பகுதியில் கேரேஜ் நடத்தி வந்தார். இவரிடம் தகிசரை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.100-ஐ கடனாக வாங்கியிருந்தார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

சம்பவத்தன்று ராஜூ பாட்டீல் அவரிடம் ரூ.100 கடன் வாங்கியவரின் உறவினரான பரமேஷ்வர்(28) என்பவரை பார்த்தார். அவர் பரமேஷ்வரிடம் உறவினருக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு பரமேஷ்வர் பணத்தை தரமுடியாது என கூறினார்.

இதையடுத்து ராஜூ பாட்டீல் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், ராஜூ பாட்டீலை வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலுக்கு தீ வைத்துவிட்டு மெக்கானிக் ராஜூ பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். எனினும் போலீசார் பிரேத பரிசோதனையில் மெக்கானிக் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர்.

எனவே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.100 தகராறில் மெக்கானிக்கை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் பரமேஷ்வரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்