நாடு முழுவதும் இதுவரை 5 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி..!
நாடு முழுவதும் இதுவரை 5 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் 5 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.