சீக்கியர்களுக்கு துணை நிற்கும் அரசாக பாஜக எப்போதும் இருக்கும் - பிரதமர் மோடி

சீக்கியர்களுக்கு துணை நிற்கும் அரசாக பாஜக எப்போதும் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2022-02-08 10:59 GMT
புதுடெல்லி,

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி காணொலி மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய பஞ்சாப்பை உருவாக்குவதே பாஜகவின் குறிக்கோள். எங்களிடம் தொலைநோக்குப் பார்வையும் பணியின் சாதனையும் உள்ளது. பஞ்சாபில் எல்லைப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்குவோம். கர்தார்பூர் சாஹிப்பை காங்கிரஸால் இந்தியாவில் வைத்திருக்க முடியவில்லை. 

ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக சிலர் பஞ்சாபை பயங்கரவாதத் தீயில் எரிய விடுகிறார்கள். இந்தியாவை முன்னோக்கி வைத்திருப்பது பஞ்சாபின் அடையாளம். சீக்கியர்களுக்கு துணை நிற்கும் அரசாக பாஜக எப்போதும் இருக்கும். விரைவில் நான் பஞ்சாப் செல்ல உள்ளேன். பஞ்சாப் மக்களை சந்திக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்