இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா; புதிதாக 67 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-08 04:06 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைய தினம் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, 83 ஆயிரத்து 876 ஆனது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 67 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 1,188 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை  கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,80,456 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,40,658 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 9,94,891 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,70,21,72,615 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்