அருணாசல பிரதேசம்; பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கியதாக தகவல்
கமேங் செக்டாரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்களின் வாகனம் பனிச்சரிவில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடாநகர்,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு அடிக்கடி பனிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அங்குள்ள கமேங் செக்டாரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்களின் வாகனம் பனிச்சரிவில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 வீரர்கள் வரை சிக்கியிருப்பதாகவும் வீரர்களை மீட்க ஹெலிகாப்டரில் மீட்புக்குழு சென்றுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.