லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டுச்சென்றுள்ளார் என பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-06 04:51 GMT
மும்பை,

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.12 மணியளவில் காலமானார்.  அவருக்கு வயது 92. 

  இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். 2001 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தேனினும் இனிய தனது குரலால் இசை உலகில் தனி ராஜ்ஜியம் செய்த லதா மங்கேஷ்கர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் மோடி இரங்கல்

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:  லதா மங்கேஷ்கர் மறைவு செய்தி கேட்டு  வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு கடும்  வேதனை அடைந்தேன். நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டு சென்றுள்ளார். இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக எதிர்காலத்தில் நினைவுகூரப்படுவார். 

அவரது இனிமையான குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது” எனத்தெரிவித்துள்ளார்.  அதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் லதாமங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்