உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், விவசாய மற்றும் விவசாயம் சாரத நிலம் என எதுவும் இல்லை எனவும் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத்திடம் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத்திடம் தங்கநகைகளும் உள்ளன. இவர் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டபடி, ரூ.49,000 மதிப்பிலான தங்கசெயின் உள்ளது.
இதர தங்கநகைகளின் மதிப்பு ரூ.26,000 என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கையிருப்பாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சத்து 99 ஆயிரத்து 171 ரூபாய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், விவசாய மற்றும் விவசாயம் சாரத நிலம் என எதுவும் இல்லை எனவும் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.