உ.பி.: கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ராம்பூர்,
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் நகரில் தண்டா பகுதிக்கு உட்பட்ட இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.
காரின் ஓட்டுனர் தீவிர சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.