2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் கைது

கொல்லம் அருகே இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெணை போலீசார் கைது செய்துள்ளனர்

Update: 2022-02-04 06:02 GMT
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கொல்லம் புனலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு (வயது30). இவருக்கு 5 மற்றும் 9 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவர் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், ஏதாவது ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார். வீட்டில் தனிமையில் இருந்த சின்னுவுக்கும் கொல்லம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கடந்த இரண்டு வருடமாக தொடர்ந்து வந்தது. 

இந்த நிலையில் சின்னு தனது இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு கடந்த 6 மாதத்தங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார்.

அனாதையாக தவித்த இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள்.

இதுகுறித்து புனலூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணை, அந்த பெண் திருச்சூரில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்