கோவா சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி இன்று பனாஜி செல்கிறார்
ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக இன்று கோவாவிற்கு வருகிறார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
பனாஜி,
உத்தரப்பிரதசேம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் நாட்டிலேயே சின்ன மாநிலமான கோவாவில் வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி கோவாவில் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இருப்பினும், அங்கு பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் உண்மையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, இன்று தேர்தல் பிரசாரத்திற்காக கோவா செல்கிறார். கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்தின் சான்குலிம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.