ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

ஜம்மு-காஷ்மீரில் பிப்.8 வரை பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-03 14:41 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

காஷ்மீரின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில் அந்த நேரத்தில் 2 செமீ பனிப்பொழிவும், குல்மார்க்கில் 19 செ.மீ புதிய பனிப்பொழிவு இருந்ததாகவும் வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக்கில் 4 செமீ பனிப்பொழிவும், தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் 16 செமீ பனிப்பொழிவும் பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 8 வரை பெரும்பாலான இடங்களில் ஒழுங்கற்ற வானிலையுடன் பனிப்பொழிவு இருக்கும் என்றும், பிப்ரவரி 6 மற்றும் 7-ஆம் தேதியில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்