அசாமில் மேலும் 1,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 1,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாமில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த மாத தொடக்கத்தில் இருந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
அதன்படி, அசாம் மாநிலத்தில் இன்று மேலும் 1,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 5,293 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 95 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 178 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அசாமில் வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 18 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.