கேரளாவில் மேலும் உயர்ந்த கொரோனா: புதிதாக 52,199 பேருக்கு தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-02 13:20 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. நேற்றைய தினம் அங்கு 51,887 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 52,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,29,755 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 29 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 471 உயிரிழப்புகள் தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்படி இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 56,100 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 41,715 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56,95,091 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 3,77,823 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்