பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
புதுடெல்லி,
நடப்பாண்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:-
கொரோனாவால் பாதிப்பை சந்தித்த அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா மட்டும் உணவு சேவை துறைகள் அதிக சிரமத்திற்கு ஆளானதால் அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் பிட் காயின் போன்றவை டிஜிட்டல் கரன்சி அல்ல.
வரி வசூல் குறிக்கோள்கள் சாத்தியமாகும் அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளன. எல்.ஐ.சி பங்குகளை மதிப்பிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை.கொரோனா காலத்தில் அதிக சவால்களை எதிர்கொண்ட போதும் வரியை உயர்த்தவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.