பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்யம்தான் உள்ளது ..! - மம்தா பானர்ஜி தாக்கு

சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-01 08:52 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் போன்றவை இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்யம்தான் உள்ளது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது, இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று அதில் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார். 



மேலும் செய்திகள்