ஐதராபாத் அருகே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம் ஐதரபாத் அருகே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-02-01 05:04 GMT
ஐதராபாத், 

தெலுங்கானா மநிலம் ஐதராபாத் அருகே உள்ள நிஜாம் பேட்டை என்ற இடத்தில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த தனியார் மருத்துவமனையில்  நேற்று இரவு  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தரைதளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தையடுத்து  அங்கு சிகிச்சை பெற்று வந்த 25- நோயளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.  அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

மேலும் செய்திகள்