இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 059- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கொரோனா 3-வது அலை உச்சம் பெற்றது. இதனால், மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மாநில அரசுகள், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தின.
இதன் பலனாக கொரோனா 3-வது அலை பரவல் வேகமாக சரியத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து மக்களை சற்று நிம்மதி அடையச் செய்துள்ளது.
கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு;- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,192- பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 076- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 43 ஆயிரத்து 059- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 11.69-சதவிகிதமாக இருக்கிறது.
தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 11.69- சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 166.68 கோடியாக உயர்ந்துள்ளது.