திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8-ந்தேதி ரத சப்தமி விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா 8-ந்தேதி நடக்கிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா வருகிற 8-ந்தேதி நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. முதல் வாகனச் சேவையாக காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் ேசவை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனச் ேசவை, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகனச் ேசவை, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவை, மதியம் 2 மணியில் மாலை 3 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும் தொட்டியில் சக்கர ஸ்தானம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனச் ேசவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனச் ேசவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனச் சேவை நடக்கிறது.
ரத சப்தமி விழாவையொட்டி அன்று கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீேதவி, பூேதவி தாயார்களுடனும், மலையப்பசாமி தனித்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அனைத்து வாகனச் ேசவைகளும் கோவில் உள்ேளயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலுக்கு ெவளிேய நான்கு மாடவீதிகளில் உலா வராது.