கர்நாடகாவில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரன் தொற்று
கர்நாடகாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66- ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66- ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஒமைக்ரான் பாதித்த 23 பேரில் 19 பேர் சர்வதேச பயண தொடர்பு உள்ளவர்கள். நாட்டில் முதல் முதலாக கடந்த 2 ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் தான் முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று நுழைந்தது.
ஒமைக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கர்நாடகாவில் மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனத்தெரிகிறது.