இந்தியாவில் டெல்டா வைரசுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியதா?

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Update: 2021-12-31 09:46 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா,  இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதால், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மத்திய மாநில அரசுகளால் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 1,270- பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மட்டும் 450 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்